Home இந்தியா அப்துல்கலாமிற்குக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்

அப்துல்கலாமிற்குக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல்

507
0
SHARE
Ad

janaபுதுடில்லி, ஜூலை 28- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு, இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் தலைசிறந்த மகனை நாடு இழந்து விட்டது. அப்துல்கலாம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் அதிபராகவே வாழ்ந்தவர். மரணத்துக்குப் பின்னரும் அவர் அப்படியே வாழ்வார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, “அப்துல்கலாம் பன்முகத்திறமை கொண்டவர். அவர் ஒரு தொழில்நுட்ப மனிதர்” என்று தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.