Home நாடு கேஎல்ஐஏ 2: குட்டைபோல் தேங்கும் தண்ணீர் – டோனி கடும் அதிருப்தி

கேஎல்ஐஏ 2: குட்டைபோல் தேங்கும் தண்ணீர் – டோனி கடும் அதிருப்தி

560
0
SHARE
Ad

klia2_1_2711_620_414_100கோலாலம்பூர், ஜூலை 28 – கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் ஓடுபாதை நோக்கி விமானம் செல்லும் பாதைகளில் சிறு குட்டைகள் போல் தண்ணீர் தேங்குவது தொடர்பில் ஏர் ஆசியா குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு பிரச்சினை தான் என மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் (எம்ஏஎச்பி – MAHB) தலைவர் விளக்கமளித்து இருப்பது கேலிக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

tony-fernandes-airasia1

#TamilSchoolmychoice

“எம்ஏஎச்பி இவ்வாறு தெரிவித்திருப்பது சரியல்ல. அதன் நிர்வாகம் தன்னையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,” என டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் டோனி.

முன்னதாக, விமான நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கியபோதே இத்தைகய பிரச்சினைகள் பின்னால் எழும் என்பதை அறிந்திருந்ததாக ப்ளூம்பெர்க் தொலைக்காட்சியிடம் எம்ஏஎச்பி தெரிவித்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டோனி, இத்தகைய விளக்கம் தமக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கிடையே டோனி சுட்டிக்காட்டிய குறைகள் தொடர்பில் எம்ஏஎச்பி நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், நீண்டகால அடிப்படையில் இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

“விமான நிலையம் இன்னும் கூட மூழ்கிக் கொண்டிருக்கிறது,” என ஏர் ஆசியாவின் ஐரீன் ஓமார் கூறியதாக ப்ளூம் பெர்க் குறிப்பிட்டுள்ளது.

“இத்தகைய குறைபாடுகள் காரணமாக விமானங்கள் தாமதமாகலாம். மேலும் ஏர் ஆசியா விமானங்கள் சேதங்களையும் சந்திக்கும். இதனால் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். பயணிகள் காயமடையும் முன்பே தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகிறது,” என்று ஏர் ஆசியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.