Home நாடு புதிய அமைச்சரவை: பிரதமரின் முடிவை முழுமனதுடன் ஏற்கிறேன் – மொகிதின் யாசின்

புதிய அமைச்சரவை: பிரதமரின் முடிவை முழுமனதுடன் ஏற்கிறேன் – மொகிதின் யாசின்

616
0
SHARE
Ad

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????கோலாலம்பூர், ஜூலை 28 – 1எம்டிபி விவகாரத்தில் தான் விடுத்த கருத்துகள் தான் பதவி நீக்கத்திற்குக் காரணம் என்றால், அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

தனக்கென்று சில கொள்கைகளும், நிலைப்பாடுகளும் உள்ளதை அழுத்தமாகக் குறிப்பிட்ட மொகிதின் யாசின், தான் நாட்டு மக்களையும், அம்னோவின் நற்பெயரையும், தேச நலனையும் பாதுகாக்கும் நோக்கில் தான் அவ்வாறு கருத்துக் கூறியதாகவும் மொகிதின் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரின் புதிய அமைச்சரவை நியமனங்களுக்குத் தான் மதிப்பளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மொகிதின், தன்னை கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி முதல் இத்தனை ஆண்டுகள் துணைப்பிரதமராகப் பதவியில் அமர்த்திய பிரதமருக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice