Home இந்தியா அப்துல்கலாமின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி: 2 நாட்களுக்கு அவை ஒத்திவைப்பு

அப்துல்கலாமின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி: 2 நாட்களுக்கு அவை ஒத்திவைப்பு

596
0
SHARE
Ad

parliamentபுதுடில்லி, ஜூலை 28- கடந்த ஒருவார காலமாக ஒரே அமளி துமளியாகக் காட்சியளித்த பாராளுமன்றம், இன்று ஆழ்ந்த துயரத்தில் மிகவும் அமைதியாகக் காணப்பட்டது.

இன்றைய கூட்டத் தொடரின் முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, அப்துல் கலாமின் ஆத்மா அமைதி பெற அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, அப்துல்கலாம் அவர்களின் மறைவிற்குத் துக்கம் அனுசரிக்கும் விதமாகச் சபாநாயகர்,  இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்றத் கூட்டத்தொடரை ஒத்திவைத்தார்.

#TamilSchoolmychoice