தயாரிப்பாளர்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகப் பெப்சி தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை அதிகரித்து வெளியிட்டதால், அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். சம்பளப் பிரச்சினையில் உடன்பாடு ஏற்படும் வரை படப்பிடிப்பு நடக்காது எனத் தெரிவித்தனர்.
இதனால்,கடந்த 27-ஆம் தேதி முதல் எந்தப் படப்பிடிப்பும் நடக்கவில்லை.
இந்நிலையில், சென்ற மூன்று நாட்களாகச் சம்பளப் பிரச்சினை தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும் ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கும் இடையே பிலிம்சேம்பரில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டனர்.ஆனால், சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் சங்கத்தினருடன் மட்டும் பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது.
எனினும், நாளை முதல் படப்பிடிப்புகள் தொடங்கும் எனத் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.