Home உலகம் இந்தியாவிடமே கோஹினூர் வைரத்தை கொடுத்துவிடுங்கள் – பிரிட்டன் எம்பி கோரிக்கை!

இந்தியாவிடமே கோஹினூர் வைரத்தை கொடுத்துவிடுங்கள் – பிரிட்டன் எம்பி கோரிக்கை!

591
0
SHARE
Ad

vizலண்டன், ஜூலை 30 – “இந்தியா-பிரிட்டன் நாடுகளின் ஒற்றுமை நிலை பெற வேண்டுமெனில், இந்தியாவின் கோஹினூர் வைரத்தை, இந்தியாவிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கெயித் வாஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், இந்தியாவை ஆட்சி செய்ததற்கு இழப்பீடு தரவேண்டும் என இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சசி தரூர், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு ஒன்றியத்தில் பேசியது, அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சசி தரூரின் பேச்சினை வரவேற்றுள்ள கெயித் வாஸ், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சசி தரூரின் கூற்றுகளை நான் வரவேற்கிறேன். எனினும், அவர் கூறியது போல் இழப்பீடு கொடுப்பது சாத்தியமில்லை. ஆனால், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முயற்சி செய்தால், இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரத்தை, இந்தியாவிடமே கொடுத்துவிடலாம்.”

“நான் இந்த பிரச்சாரத்தை பல வருடங்களாக நடத்தி வருகின்றேன். நவம்பரில், மோடியின் பிரிட்டன் வருகையின் போது இது நிகழ்ந்தால், இரு நாடுகளின் உறவு மேலும் வலு பெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

உலகின் சிறந்த வைரங்களுள் ஒன்றான 105-காரட் கோஹினூர் வைரம், ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. தற்சமயம், அந்த வைரம்  இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.