Home கலை உலகம் தயாரிப்பாளர் சங்கம் பூட்டி சீல் வைக்கப்பட்டது

தயாரிப்பாளர் சங்கம் பூட்டி சீல் வைக்கப்பட்டது

1062
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.30 நிலவரம்) தமிழ்த் திரைப்படச் சங்கத் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்து வரும் பிரச்சனைகளைத் தொடர்ந்து தி.நகரிலுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகம் இன்று அரசு தரப்பு அதிகாரிகளால் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

அந்த அலுவலகத்தில் பதிவு பெறாத முறையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகம் இயங்கி வந்ததாகக் காரணம் காட்டி அரசு அதிகாரிகள் அந்த அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தனர். அந்த அலுவலகத்தில் 145 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு சங்கத் தலைவர் விஷாலுக்கும் அவரது எதிர்த் தரப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து நேற்று ஒரு தரப்பினரால் பூட்டப்பட்ட, தியாகராய நகரிலுள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டைத் திறக்க முற்பட்ட விஷால் கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து தி.நகரிலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விஷால் இந்திய நேரம் மாலை 7.00 மணியளவில் காவல் துறையினரால் விடுவிக்கப்பட்டார்.

விடுதலையான விஷால் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது தன்மீது பிரிவு 145-இன் கீழ் பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததற்காக தன்மீது காவல் துறையினர் குற்றம் சுமத்தியிருப்பதாகவும், இதனை எதிர்த்து சட்டரீதியானப் போராட்டத்தைத் தான் தொடரப் போவதாகவும் சூளுரைத்தார்.

-செல்லியல் தொகுப்பு