Home உலகம் லிபியாவில் 4 இந்தியப் பேராசிரியர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தல்!

லிபியாவில் 4 இந்தியப் பேராசிரியர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தல்!

499
0
SHARE
Ad

aiபுதுடில்லி, ஜூலை31- லிபியாவில் சிர்த் நகரில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்களைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

இச்செய்தியை அங்குள்ள ஆங்கிலத்  தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்தத் தீவிரவாதிகள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கடத்தப்பட்ட நான்கு பேரும்  கர்நாடகா மற்றும் ஆந்திரா ஐதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் நால்வரும் சிர்த் நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிபவர்கள் என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அவர்கள் பணிபுரியும் ஊரான சிர்த்,கடந்த மே மாதம் முதல் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தியவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளாக இருந்தால், அந்த நான்கு பேரின் உயிருக்கும் மிகக் கொடுமையான முறையில் ஆபத்து நேரலாம் என்பதால் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர்.

அவர்களைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெறுவதில் வெளியுறவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.