Home உலகம் ரியூனியன் தீவு: விமான பாகம் இருந்த பகுதியில் தண்ணீர் பாட்டில் கண்டுபிடிப்பு!

ரியூனியன் தீவு: விமான பாகம் இருந்த பகுதியில் தண்ணீர் பாட்டில் கண்டுபிடிப்பு!

641
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 31 – ரியூனியன் தீவில் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், இன்று சீன மொழியில் எழுதப்பட்ட தண்ணீர் பாட்டிலும், இந்தோனேசியாவில் தயாரான சுத்தம் செய்யப் பயன்படும் பொருட்களும் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

bottle   லின்ஃபோ.ஆர்இ தளம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 

239 பயணிகளுடன் மாயமான எம்எச் 370 விமானத்தில், 152 சீனப் பயணிகளும், 12 இந்தோனேசியப் பயணிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது, கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள், எம்எச்370 பயணிகளுடையதுதானா? என்பது இன்னும் உறுதியாக வில்லை.