Home இந்தியா அப்துல் கலாம் பெயரில் விருது: தமிழக அரசு அறிவிப்பு

அப்துல் கலாம் பெயரில் விருது: தமிழக அரசு அறிவிப்பு

587
0
SHARE
Ad

apசென்னை, ஜூலை 31-அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இவ்விருது அறிவியல் துறையில் முன்னேற்றம் காண்பவருக்கும், மனிதவியலில் மேம்பாட்டை உருவாக்குபவருக்கும், மாணவர் நலன்களின் அக்கறை செலுத்துபவருக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவ்விருது 8 கிராம்  தங்கப்பதக்கம், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை உள்ளடக்கியதாகும்.

இவ்வாண்டு ஆகஸ்டு 15 முதல் இவ்விருது வழங்கப்படும்.

மேலும், அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகளுக்கு அப்துல் கலாமின் அண்ணன் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.