விக்டோரியா – எம்எச்370 விமானத்தைச் சேர்ந்தது என நம்பப்படும் இரண்டு பாகங்கள் மீடகப்பட்டிருப்பதாக சேசெலெஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஃபார்கர் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் ஆமைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் இந்தப் பாகங்களைக் கண்டறிந்திருப்பதாக சேசெலெஸ் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் (எஸ்சிஏஏ) தெரிவித்திருக்கிறது.
120 செமீ (3.94 அடி) நீளமும், 30 செமீ (1 அடி) அகலமும் கொண்ட அலுமினியம் மற்றும் கார்பன் பைபர் பொருளால் ஆன அந்த இரு பாகங்களும் எஞ்சினை மூடும் பாகங்களாக இருக்கலாம் என எஸ்சிஏஏ செய்தித் தொடர்பாளர் மைக்கேல் பேயெட் தெரிவித்திருக்கிறார்.