Home நாடு அது எம்எச்370 பாகம் கிடையாது – டிசிஏ உறுதி!

அது எம்எச்370 பாகம் கிடையாது – டிசிஏ உறுதி!

885
0
SHARE
Ad

Azharuddin-Abdul-Rahmanகோலாலம்பூர் – சேசெலெசில் கண்டறியப்பட்ட இரு பாகங்கள் எம்எச்370 விமானப் பாகங்கள் கிடையாது என உள்நாட்டு வான்போக்குவரத்து இலாகா அறிவித்திருக்கிறது.

இது குறித்து டிசிஏ பொது இயக்குநர் டத்தோஸ்ரீ அசாருடின் அப்துல் ரஹ்மான் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எம்எச்370 விசாரணைக் குழு அப்பாகங்கள் குறித்த புகைப்படங்களை ஆய்வு செய்கையில் அது எம்எச்370 விமானத்தின் பாகங்கள் இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது என்று தெரிவித்தார்.

பார்கர் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் ஆமைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் 2 பெரிய பாகங்களைக் கண்டறிந்திருப்பதாக சேசெலெஸ் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் (எஸ்சிஏஏ) தெரிவித்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.