Home நாடு “நமது நாட்டிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” – ஹஜ் யாத்ரீகர்களிடம் நஜிப் வேண்டுகோள்

“நமது நாட்டிற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” – ஹஜ் யாத்ரீகர்களிடம் நஜிப் வேண்டுகோள்

593
0
SHARE
Ad

NAJIBகோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நாடும், அரசாங்கமும் நலம் பெற, மெக்காவில் பிரார்த்தனை செய்யுமாறு, ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் 1,200 யாத்ரீகர்களைப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த 1,200 யாத்ரீகர்களுக்கும் 1எம்டிபி நிதியுதவி அளித்து அனுப்பி வைக்கின்றது.

எந்த ஒரு அந்நிய சக்தியும் அரசாங்கத்தை கவிழ்த்துவிடக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள் என அவர்களிடம் நஜிப் வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

“தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் போகும் இடத்தில் தான் உங்களது வேண்டுதல்களுக்குப் பதில் கிடைக்கும். நமது நாட்டின் பாதுகாப்பிற்காகவும், நமது தலைவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். யார் பதவியில் அமர வேண்டும், யார் இறங்க வேண்டும் என்பதை நமது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அந்நியர்களோ அல்லது வெளிநாட்டினர்களோ அல்ல” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயாவிலுள்ள சுல்தான் மிஸான் சைனல் அபிடின் மசூதியில் இன்று நடைபெற்ற ஹஜ் புனிதப் பயண நிகழ்வில் கலந்து கொண்ட நஜிப் இவ்வாறு பேசியுள்ளார்.

Najib said this in his speech at a function for the haj pilgrims at the Sultan Mizan Zainal Abidin mosque in Putrajaya.