Home அவசியம் படிக்க வேண்டியவை டுவிட்டரில் தமிழ், குஜராத்தி உள்ளிட்ட 4 இந்திய மொழிகள் அறிமுகம்!

டுவிட்டரில் தமிழ், குஜராத்தி உள்ளிட்ட 4 இந்திய மொழிகள் அறிமுகம்!

558
0
SHARE
Ad

twitter-logoகோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – டுவிட்டரில் தமிழ், மராத்தி, குஜராத்தி, கன்னடம் என நான்கு இந்திய மொழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் டுவிட்டரை பயன்படுத்துவதற்கு மொழி தடையாகி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு வட்டார மொழிகளை டுவிட்டரில் மேம்படுத்த, டுவிட்டர் இந்தியா (Twitter India) நிர்வாகம் முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ரஹீல் குர்ஷீத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று மேற்கூறிய நான்கு மொழிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாங்கள் தற்போது டுவிட்டரில் தமிழ், குஜராத்தி, மராத்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளை மேம்படுத்தி உள்ளோம். டுவிட்டரின் தளத்திலும், அண்டிரொய்டு செயலியிலும் இந்த மேம்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன், டுவிட்டரில் இந்தி மற்றும் பெங்காலி ஆகிய இரு இந்திய மொழிகள் மேம்படுத்தப்பட்டு இருந்தன. மொழிகளை தேர்வு செய்ய ‘ப்ரோபைல்’ (Profile) செட்டிங்கில், மொழி என்ற தேர்வில் தேவையான மொழியை தேர்வு செய்யலாம்.