Home Featured உலகம் ரியூனியன் தீவில் மற்றுமொரு பாகம் கண்டுபிடிப்பு – விமானத்தின் ஜன்னலா?

ரியூனியன் தீவில் மற்றுமொரு பாகம் கண்டுபிடிப்பு – விமானத்தின் ஜன்னலா?

942
0
SHARE
Ad

planewindowரியூனியன் தீவு, ஆகஸ்ட் 5 – ரியூனியன் தீவில் மாயமான எம்எச்370 விமானத்தின் பாகங்கள் என்று சந்தேகிக்கப்படும் வகையில் தினமும் பல்வேறு வகையான பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றன.

முதலில் எடுக்கப்பட்ட விமானத்தின் இறக்கையின் ஒருபகுதி போயிங் 777 விமானத்தின் பாகம் தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அது எம்எச்370-ன் பாகமா என்பது குறித்த விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ரியூனியன் தீவில் வசிக்கும் பொதுமக்களில் தன்னார்வலர்கள் பலர் கடற்கரையில் ஆங்காங்கே கரை ஒதுங்கியிருக்கும் சிதைந்த பொருட்களைக் கைப்பற்றி அதில் சந்தேகத்திற்கு இடமான பொருட்களை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த ஞாயிற்றுக்கிழமை, விமானத்தின் கதவு என நம்பப்படும் பாகம் ஒன்று கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ரியூனியன் தீவு கடற்கரையில் உடற்பயிற்சி செய்ய சென்ற ஒருவர் விமானத்தின் ஜன்னல் போன்ற பாகம் ஒன்றை கண்டெடுத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

தற்போது அந்தப் பாகமும் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.