Home இந்தியா ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் கேரள வாலிபர்!

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் கேரள வாலிபர்!

572
0
SHARE
Ad

isisபுது டெல்லி, ஆகஸ்ட் 6 – கொலைபாதக செயல்களைச் செய்து வரும் பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ்-ல், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிக்கையாளர் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய உளவுத் துறை, கேரளா அரசிடம், கேரள வாலிபர் ஒருவர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த தகவல் படி, கேரளாவின் பிரபல பத்திரிக்கை ஒன்றில் பத்திரிக்கையாளராக பணி புரிந்து வந்த அந்த வாலிபர், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்த வண்ணம் இருந்து வந்திருக்கிறார். அந்த அமைப்பின் யோசனைகள் மற்றும் கொள்கைகளால் அவர் கவரப்படவே, சமூக ஊடகங்களில் அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.

எப்படியேனும் அந்த இயக்கத்தில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவரை, கண்காணித்து வந்த காவல் துறையினர், அந்த வாலிபரின் குடும்பத்தாரிடம் அவர் பற்றிய உண்மைகளை தெரிவித்துள்ளனர். அதிர்ந்து போன அவரின் குடும்பத்தார், அது போன்ற தொடர்புகளை துண்டித்துக் கொள்ளும் படி, அவரை வற்புறுத்தி உள்ளனர்.

#TamilSchoolmychoice

ஒரு கட்டத்தில் தனது பதவியை ராஜினாமா பண்ணிய அந்த வாலிபர், கத்தார் சென்று அந்த பத்திரிக்கையின் கிளையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பின்னர் தான், அவர் அங்கிருந்து சிரியா சென்று, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் இணைந்துள்ளார். இவர் பற்றிய தகவல்கள் தற்போது உறுதியாகி உள்ளன. எனினும், அந்த வாலிபரின் முகவரியை வெளியிட்டால், அவரின் குடும்பம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதால் இதுவரை இரகசியம் காக்கப்பட்டு வருகிறது.