Home இந்தியா நடிகை குஷ்பு-நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு – குஷ்பு காங்கிரசில் சேர்வாரா?

நடிகை குஷ்பு-நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு – குஷ்பு காங்கிரசில் சேர்வாரா?

830
0
SHARE
Ad

Kushboo-Sliderசென்னை, மார்ச் 9 – திமுகவில் முக்கிய பிரமுகராக உலா வந்து கொண்டிருந்த நடிகை குஷ்பு அண்மையில் மு.க.ஸ்டாலின் பற்றி சில கருத்துக்கள் சொல்லப்போக அதனால் உருவான சர்ச்சைகளால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.

இதற்கிடையில் நடிகை குஷ்பு ஐதராபாத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் நாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற தனது கட்சியை கலைத்துவிட்டு சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்து மத்திய மந்திரியானார்.

#TamilSchoolmychoice

குஷ்பு தி.மு.க.வில் இணைந்து கூட்டங்களில் பேசி வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்று சர்ச்சையை கிளப்பியது. சாந்தோமில் உள்ள அவரது வீட்டிலும் கல்வீச்சு நடந்தது. இந்த கல்வீச்சு சம்பவத்தை தி.மு.க. தலைமை கழகம் கண்டித்தது.

குஷ்பு டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். சிரஞ்சீவியை குஷ்பு சந்தித்ததற்கான காரணம் தெரியவில்லை.

திமுகவில் கருணாநிதியின் ஆதரவு குஷ்புவுக்கு இருக்கிறது என்றாலும் ஸ்டாலின் குழுவினர்தான் தற்போது திமுக கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இருந்து கொண்டு திமுகவில் அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டாலின் குழுவினரோடு மோதல் ஏற்பட்டுவிட்டதால் இனியும் குஷ்புவுக்கு திமுகவில் எதிர்காலம் இருக்குமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

எனவே, சிரஞ்சீவியைப் போன்று குஷ்புவும் காங்கிரசில் ஐக்கியமாவாரா என்ற ஐயம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

குஷ்புவை சேர்த்துக் கொள்வதால் தற்போது தமிழ் நாட்டில்  தொய்வான நிலையில் இருக்கும் காங்கிரசை மீண்டும் பலப்படுத்துவது சுலபமாக இருக்கும் என காங்கிரஸ் தலைமைத்துவமும் கணக்கு போடுவதாக தெரிகின்றது.

எனவே, இந்த சூழ்நிலையில் சிரஞ்சீவி-குஷ்பு சந்திப்பு மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்றது.