Home Featured நாடு அமரர் டான்ஸ்ரீ என்.எஸ்.மணியம் துணைவியார் புவான்ஸ்ரீ ஜனகம் காலமானார்!

அமரர் டான்ஸ்ரீ என்.எஸ்.மணியம் துணைவியார் புவான்ஸ்ரீ ஜனகம் காலமானார்!

554
0
SHARE
Ad

ஷா ஆலாம் – மஇகா சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் தலைவரும், சிலாங்கூர் அரசின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினருமான அமரர் டான்ஸ்ரீ என்.எஸ்.மணியம் அவர்களின் துணைவியார் புவான்ஸ்ரீ ஜனகம் (படம்) இன்று காலை 5.00 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Puan Sri Janagam (demised)அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்:

எண்: 20, ஜாலான் மெராந்தி 3/7 (Jalan Meranti 3/7)

#TamilSchoolmychoice

40000 ஷா ஆலாம்

91 வயதான புவான்ஸ்ரீ ஜனகம் முன்னாள் செனட்டரும் மஇகா தஞ்சோங் காராங் தொகுதிக் காங்கிரசின் தலைவருமான டத்தோ என்.எஸ்.கிருஷ்ணனின் தாயாருமாவார்.

புவான்ஸ்ரீ ஜனகத்தின் பேரனும், டத்தோ என்.எஸ்.கிருஷ்ணன் புதல்வருமான அரவிந்த் கிருஷ்ணன் மஇகா இளைஞர் பகுதியின் செயலாளருமாவார்.

புவான்ஸ்ரீ ஜனகத்தின் கணவர் அமரர் டான்ஸ்ரீ மணியம் நான்கு தவணைகளாக கோலசிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் என்பதோடு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்தவர். இவர் மஇகா சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் தலைவருமாவார்.

டான்ஸ்ரீ என்.எஸ்.மணியத்தின் தலைமைத்துவத்தின் கீழ் மஇகா சிலாங்கூர் மாநிலச் செயலாளராகப் பணியாற்றி வந்த டத்தோஸ்ரீ ச.சாமிவேலு 1977ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ என்.எஸ்.மணியத்திற்குப் பின்னர் மஇகா சிலாங்கூர் மாநிலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

டான்ஸ்ரீ என்.எஸ்.மணியம் நேசா கூட்டுறவுக் கழகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கின்றார்.