மேலும், குடும்ப நல நிதி, தொழிலாளர் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பணப் பயன்கள் மற்றும் இதர பணப் பலன்களையும் உடனடியாக அவரது குடும்பத்திற்கு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் எனக் கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.