Home இந்தியா மோடி நாளை சென்னை வருகை: “கருப்புக்கொடி காட்டுவோம்”-ஈ.வி.கே.எஸ்!

மோடி நாளை சென்னை வருகை: “கருப்புக்கொடி காட்டுவோம்”-ஈ.வி.கே.எஸ்!

465
0
SHARE
Ad

modi00110-600சென்னை, ஆகஸ்ட் 6- சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் தேசியக் கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வருகிறார்.

அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்க தமிழகப் பாஜக தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

மத்திய அரசு நடத்தும் இந்த விழாவில் தமிழ்நாடு உட்பட  தென் மாநிலங்களைச் சேர்ந்த 4000 நெசவாளர்கள் பங்கேற்கிறார்கள். இவ்விழாவில், சிறந்த நெசவாளர்களுக்குப் பிரதமர் மோடி விருதுகள் வழங்கிக் கெளரவிக்கிறார்.

#TamilSchoolmychoice

பொதுவாக இந்த விழா டெல்லியில் நடைபெறுவதுதான் வழக்கம்.பிரதமர் மோடி இதுநாள் வரை சென்னைக்கு வந்ததில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அக்குறையைப் போக்க சென்னையில் முதல் முறையாக இவ்விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் சென்னையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மது விலக்குப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும்  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக்கொடி காட்டுவோம் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

காங்கிரசாரின் ஒருவரது கருப்புக் கொடியாவது மோடி கண்ணில் படும் என்றார் அவர்.