சேலம், ஆகஸ்ட் 6- மதுக்கடைகளை அகற்றக் கோரி கைபேசிக் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று போராடிய காந்தியவாதி சசிபெருமாள் போராட்டத்தின் போதே உயிரிழந்தார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என உறுதியாகக் கூறிவிட்ட அவரது குடும்பத்தினர், வாயில் கருப்புத் துணியைக் கட்டியபடி கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் கடந்த ஒரு வாரமாகச் சசிபெருமாளின் உடல் கன்னியாகுமரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சசிபெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் மது ஒழிப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில்,சசிபெருமாளின் உடலைப் பிணவறையில் வைத்துப் பராமரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதால், அவரது உடலைப் பெறுமாறு உறவினர்களுக்குச் சம்மன் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன் பிறகும் அவர்கள் உடலைப் பெறாவிட்டால் அரசு சார்பில் தகனம் செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனால்,வைகோ மற்றும் திருமாவளவனின் ஆலோசனையின் படி அவரது உடலைப் பெற்றுக் கொள்ள குடும்பத்தினர் சம்மதித்தனர். நாளை அவரது சொந்த ஊரான மேட்டுக்காட்டில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
.