Home கலை உலகம் அப்துல் கலாமின் வாழ்க்கை சினிமாவாகிறது: கலாமாக அமிதாப்!

அப்துல் கலாமின் வாழ்க்கை சினிமாவாகிறது: கலாமாக அமிதாப்!

548
0
SHARE
Ad

1438082302-2133ஒடிசா,ஆக்ஸ்ட் 6-அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. அதில் கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும்,ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்தமானவர் அப்துல் கலாம். அவரது மறைவைக் கண்டு உலகமே கண்ணீர் சிந்தியது; துக்கம் அனுசரித்தது.

தமிழகத்தின் தென் கோடியிலுள்ள கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் தனித்திறமையாலும் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் முன்னேற்றம் ஒன்றே தன் வாழ்வெனக் கருதிய செம்மல். எளிமையின் மறு உருவம்; அடக்கத்தின் திரு உருவம் அவர். அப்பேர்ப்பட்ட மகாப் பெரியவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கவிருக்கிறார் இயக்குனர் நிலா மதாப் பாண்டா.

ஒடிசாவைச் சேர்ந்த இவர்  ஏற்கனவே ஐ ஆம் கலாம் (நான்தான் கலாம்) என்ற பெயரில், 2011-ஆம் ஆண்டு சிறுவன் ஒருவனின் கனவுகளை மையமாகக்கொண்டு ஒரு படம் எடுத்தார்.

அந்தப் படம் ஒரு தேசிய விருது உட்பட மொத்தம் 11 விருதுகளை வென்றது.

தற்போது கலாம் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார் பாண்டா.

பாண்டா இயக்கும் இந்தப் படத்தில் கலாமாக நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவிருக்கிறார்,

மசாலாப் படங்களாக வந்து ரசிகர்களின் ரசனையைக் கெடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், கலாம் போன்ற அற்புத மனிதரைப் பற்றிய படம் வருவது ஆரோக்கியமான விசயமே! இந்தப் படமும் பல விருதுகளைக் குவிக்க வாழ்த்துவோம்.