Home இந்தியா விஜயகாந்தைத் தொடர்ந்து பிரேமலதாவும் எல்.கே.சுதீசும் கைது

விஜயகாந்தைத் தொடர்ந்து பிரேமலதாவும் எல்.கே.சுதீசும் கைது

542
0
SHARE
Ad

vijayakanath1_1718341gசென்னை, ஆகஸ்ட் 6- கோயம்பேடு முதல் தலைமைச் செயலகம் வரை 12 கிலோ மீட்டர் தூரம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என்றும், இதில் 12,000 பேர் கலந்து கொள்வார்கள் என்றும் தேமுதிகவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால், மனிதச் சங்கிலிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்காத நிலையில்,காவல்துறையின் தடையை மீறி தேமுதிக-வின் மனிதச் சங்கிலிப் போராட்டம் தொடங்கியது.

இதனால், விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.அவரது கைதைக் கண்டித்துச் சாலை மறியலில் ஈடுபட்ட அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

மேலும், சென்னை சென்ட்ரல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் கைது செய்யப்பட்டார்