Home உலகம் இலங்கை பாராளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு: ராஜபக்சேவுக்கு ஆதரவு மந்தம்!

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு: ராஜபக்சேவுக்கு ஆதரவு மந்தம்!

604
0
SHARE
Ad

rajaகொழும்பு, ஆக்ஸ்ட்6- இம்மாதம் 17-ஆம் தேதி நடக்கவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜக்சேவும், தற்போதைய பிரதமர் ரணில்விக்ரமசிங்கேவும் போட்டியிடுகின்றனர்.

இருவரில் வெற்றி பெறப் போவது யார்? என்பது குறித்துக் கருத்துகணிப்பு நிறுவனம் ஒன்று,  25 மாவட்டங்களில் 1986 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியதில், ராஜபக்சேவைவிட விக்ரமசிங்கேவுக்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்தது.

இலங்கையில் மொத்தம் 9 பிராந்தியங்கள் உள்ளன. அதில் மேற்கு, மத்தி, வடக்கு, கிழக்கு, வடமேற்கு, யுவா, சபரகமுவா ஆகிய 7 பிராந்தியங்களில் விக்ரமசிங்கேவுக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்தனர். ராஜபக்சேவுக்குத் தெற்கு, மற்றும் வடமத்திய பிராந்தியங்களில் மட்டும் அதிக ஆதரவு உள்ளது.

#TamilSchoolmychoice

சிங்களர்கள் தான் விக்ரமசிங்கேவை விட ராஜபக்சேவை அதிகம் ஆதரிக்கின்றனர்.

ஆனால் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களில் பெரும் பாலானோர் விக்ரமசிங்கேவையே ஆதரிக்கின்றனர்.

இதனால், அடுத்தும் ரணில்விக்ரமசிங்கே தான் பிரதமர் ஆவார் எனத் தெரிகிறது.