விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசி விட்டு இரவு 7.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து கூட்டம் கலையத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் 7.50 மணிக்கு விழா மேடைக்கு எதிர்ப்புறம் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த துணி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அரங்கத்தில் மக்கள் கூட்டம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
Comments