Home Featured உலகம் ரியூனியன் தீவு: விமான இருக்கையின் கைப்பிடி கண்டெடுப்பு!

ரியூனியன் தீவு: விமான இருக்கையின் கைப்பிடி கண்டெடுப்பு!

733
0
SHARE
Ad

ரியூனியன் தீவு, ஆகஸ்ட் 8 – ரியூனியன் தீவில் எம்எச்370 விமானத்தின் சிதைந்த பாகம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், தற்போது பிரஞ்சு இராணுவ அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், அத்தீவைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில், கிரெய்சன் பிலிப் என்ற வழக்கறிஞர், அத்தீவில் தொடர்ந்து எம்எச்370 விமானத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொருட்களை கண்டெடுத்து வருவதோடு, அதை தனது டுவிட்டர் பக்கத்திலும் படங்களுடன் பதிவு செய்து வருகின்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மலேசியத் தயாரிப்பு தண்ணீர் பாட்டில்களைக் கண்டெடுத்த அவர், நேற்று விமான இருக்கைகளின் கைப்பிடிகளைப் போல் உள்ள பொருட்கள் சிலவற்றையும், சரவாக் மாநிலத்தில் கிடைக்கும் ஒருவகை மரத்தால் ஆன பொம்மைகளையும் கண்டறிந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படங்கள் இதோ:

MH370 (1)

 

MH370