அன்வாருக்குப் பதிலாக அவரது மகள் நூருல் இசா அன்வார் தான், பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்றும் சைட் குறிப்பிட்டுள்ளார்.
“என்னைப் பொறுத்தவரையில், பக்காத்தான் 1.0-ல் செய்த அதே தவறுகளை பக்காத்தான் 2.0 செய்யக்கூடாது என்று நினைகின்றேன். எதிர்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பின்னர் தான் யார் பிரதமர் என்ற கேள்வி எழும்”
“பக்காத்தான் ஆதரவாளரான நான், பிரதமர் பதவிக்கு நூருல் இசாவைத் தான் பரிந்துரைப்பேன். அவர் அவரது தந்தையைப் போல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளவில்லை. அவர் நன்றாகப் பேசுகிறார். நன்றாகப் படித்திருக்கிறார் மற்றும் நல்ல பெயருடன் இருக்கிறார்” என்று தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.