லண்டன், ஆகஸ்ட் 11 – 2020-ம் ஆண்டிற்குள் இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளது. இதனை சுட்டிக் காட்டும் வகையில் அந்த இயக்கத்தினர் வரைபடம் ஒன்றை தங்கள் இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்க தீவிரவாதிகள், தொடர்ந்து சவூதி அரேபியாவின் சில பகுதிகளிலும் தாக்குதலைத் தொடங்கி உள்ளனர். இவர்களை ஒடுக்க உலக நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் தாங்கள் ஆக்கிரமிக்க இருக்கும் நாடுகளைக் குறிக்கும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த வரைபடத்தில் தாங்கள் கைப்பற்ற இருக்கும் நாடுகளுக்கு அரபு மொழியில் பெயரிட்டுள்ளனர். இந்திய துணைக்கண்டப் பகுதிக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் ‘குரசேன்’ (Khurasan)