சிங்கப்பூர் – ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று தங்களின் 50வது தேசிய தினக் கொண்டாட்டங்களைக் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர் சிங்கப்பூர் மக்கள்.
9 ஆகஸ்ட் 1965ஆம் நாள்தான் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றது. அந்த நாளைத்தான் சிங்கையில் ஆண்டுதோறும் தேசிய தினமாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த முறை பொன்விழா நிறைவு என்பதால், ஓர் ஆண்டு முழுக்க கொண்டாட்டங்கள் தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிங்கை நாட்டின் வான்வெளியை ஒளிமயமாக்கிய வாண வேடிக்கைகள், இராணுவம் மற்றும் காவல் துறையினரின் அலங்கார அணிவகுப்புகள், வானத்தை நோக்கி சீறிப் பாய்ந்த இராணுவ விமானங்கள் – இதையெல்லாம் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்த பல இன மக்கள் என சிங்கப்பூரை குதூகலப்படுத்திய அந்த தேசிய தின வண்ணமயக் காட்சிகளில் சில இங்கே உங்களின் பார்வைக்கு:-
மேடைக்கு மேல் மேடை – சிங்கப்பூரின் பாடகியும், பாடலாசிரியருமான ஸ்டெஃபனி சன் (Stefanie Sun) சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு நடந்த மேடை நிகழ்ச்சியில் பாடல் ஒன்றை வழங்குகின்றார்.
சிங்கப்பூரின் மரினா சேண்ட்ஸ் பே தங்கும் விடுதியை ஒட்டிய கடற்கரையின் பின்னணியில் வான்வெளியை வண்ணமயமாக்கிய வாண வேடிக்கைக் காட்சிகள்..
வானத்தில் சீறிப்பாயும் இராணுவ விமானங்கள் 50 எண்ணைக் குறிக்கும் வண்ணம் வடிவமைத்து நிற்கும் காட்சி
அனைத்துக்கும் காரணம் நீதான் – எனக் கூறாமல் கூறும் வண்ணம் பின்னணியில் பிரம்மாண்டமாகத் தெரியும் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் தோற்றத்துடன் தேசிய தினக் கொண்டாட்டங்களைக் கண்டு களிக்கும் சிங்கை மக்கள்
தேசிய தினக் கொண்டாட்டத்தின் முதல் நாள் ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட வாண வேடிக்கைக் காட்சிகள்…
சிங்கப்பூர் சாலைகளில் அணிவகுத்துச் செல்லும் இராணுவ டாங்கிகளை பிரமிப்புடனும், பெருமிதத்துடனும் கண்டு மகிழும் சிங்கை மக்கள்
படம்: EPA