Home உலகம் 350 குழந்தைகளைப் பயன்படுத்தி ஆபாசப் படம் எடுத்த கொடூரக் கும்பல் கைது!

350 குழந்தைகளைப் பயன்படுத்தி ஆபாசப் படம் எடுத்த கொடூரக் கும்பல் கைது!

551
0
SHARE
Ad

paஇஸ்லாமாபாத், ஆகஸ்ட் 11- பாகிஸ்தானில் ஏறக்குறைய 350 குழந்தைகளைப் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி ஆபாசப் படம் எடுத்த கொடூரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர்; அவர்களிடம் இருந்த ஆபாசப் படங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 14 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளைக் குறிவைத்து 21 பேர் அடங்கிய கும்பல் இத்தகைய அட்டூழியத்தைச் செய்திருக்கிறது.

ராமப்புறங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியருடன் அவர்கள் அன்பாகப் பழகுவது போல் பழகி, அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து மூளைச் சலவை செய்து அவர்களை வைத்துத் தங்கள் விருப்பப்படி ஆபாசப் படம் எடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அவற்றை இணைய தளங்களில் வெளியிட்டும், மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பியும் பணம் சம்பாதித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், படங்களில் உள்ள குழந்தைகளின் பெற்றோரிடமும் காட்டி மிரட்டிப் பணம் பறித்துள்ளனர்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப, அக்கும்பல் தற்போது காவல்துறையில் சிக்கிக்கொண்டது.

இதுபோன்ற கும்பல்கள் பாகிஸ்தானில் இவ்வளவு நாட்களாக எப்படிச் சிக்காமல் செயல்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதன் பின்னணியில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? வேறு யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பாகிஸ்தானில் மிகுந்த அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.