Home Featured கலையுலகம் சக்தி குளோபல் சூப்பர் ஸ்டார்: இரண்டாம் நிலை வெற்றியாளராக வாகை சூடினார் சாஸ்தன்!

சக்தி குளோபல் சூப்பர் ஸ்டார்: இரண்டாம் நிலை வெற்றியாளராக வாகை சூடினார் சாஸ்தன்!

921
0
SHARE
Ad

11143586_10153504652244084_4318186749512251298_nகோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – ஸ்ரீலங்காவைச் சேர்ந்த சக்தி டிவி நிறுவனம் கடந்த ஓராண்டாக நடத்திய சக்தி குளோபல் சூப்பர் ஸ்டார் 2015 பாடல் திறன் போட்டியில், மலேசியக் கலைஞரான சாஸ்தன் குருப் இரண்டாம் நிலை வெற்றியாளராகத் தேர்வு (1st runner up) பெற்றுள்ளார்.

பல மாதங்களாக நடத்தப்பட்ட இப்போட்டியில், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் என உலகம் முழுவதில் இருந்தும் போட்டியாளர்கள் பங்குபெற்றனர்.

அதில், பல கட்டப் போட்டிகளுக்குப் பிறகு, இறுதிச்சுற்றுக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மலேசியக் கலைஞர் சாஸ்தன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெஷிகா, கனடாவைச் சேர்ந்த கீத்தியா மற்றும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பிரவீணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கடந்த ஜூலை 25-ம் தேதி சனிக்கிழமை, ரட்மலானாவிலுள்ள ஸ்டெயின் ஸ்டூடியோசில் நடைபெற்ற மாபெரும் இறுதிச்சுற்றில், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பிரவீணா சக்தி குளோபல் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்றார்.

11173312_10205557920200664_3638720785769092529_n

மலேசியா சார்பில் போட்டியிட்ட சாஸ்தன் இரண்டாம் நிலை வெற்றியாளராகவும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெஷிகா மூன்றாம் நிலை வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

உலகம் முழுவதில் இருந்தும் திறமையானவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், மலேசியாவிற்கு முதன் நிலை வெற்றியைத் தேடித் தந்த சாஸ்தனுக்கு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மலேசியக் கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அதில், மலேசியாவின் பெரும்பாலான முன்னணிக் கலைஞர்கள் கலந்து கொண்டு சாஸ்தனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கௌரவப்படுத்தினர்.

11800054_10205557913840505_126998743180293859_n

சாஸ்தன் திறமையான பாடகர் என்பதோடு, ‘வெட்டி பசங்க’ படத்தில் நடித்ததன் மூலம் நல்ல நடிகராகவும் பலராலும் பாராட்டுகளைப் பெற்றவர். அண்மையில், வெளியான ‘வேற வழி இல்ல’ திரைப்படத்தில் சாஸ்தன் பாடிய ‘வானம் மழையில் நனைந்தேனே’ பாடல் இளைஞர்களிடையே மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சாஸ்தன் குருப்பிற்கு செல்லியல் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– ஃபீனிக்ஸ்தாசன்

படங்கள்: சாஸ்தன் பேஸ்புக்.