Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ ஷோகேஸ் நிகழ்ச்சி: உற்சாக மழையில் நனைந்த ரசிகர்கள்!

அஸ்ட்ரோ ஷோகேஸ் நிகழ்ச்சி: உற்சாக மழையில் நனைந்த ரசிகர்கள்!

671
0
SHARE
Ad

aeXKsBq1srn1ny1STtyufmg0Xy1jgeZ8ddG16EAJVokகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் மாபெரும் இறுதிச்சுற்று வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 15-ம் தேதி, நடைபெறுவதை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி, தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் ‘ஷோகேஸ்’ என்ற  நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில், நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ், பாடகி மாதங்கி மற்றும் முந்தைய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் ஆகியோர் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி அங்கு கூடியிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு, பார்வையாளர்களில் திறமையான பாடகர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளையும் வழங்கினர்.

CHH695T8Eu5SGxk260HiyewAZiGbIBAI6gtFOCPhH2k

#TamilSchoolmychoice

மலேசிய நடிகரும், அறிவிப்பாளருமான டேனிஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக வழிநடத்த, நிகழ்ச்சியின் ஆரம்பம் தொடங்கி முடிவு வரை ரசிக்க வைத்தன.

இந்த ஷோகேஸ் நிகழ்ச்சியில், கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ டாக்டர் லோக பாலன், டான்ஸ்ரீ எம்.கேவியஸ், அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து மற்றும் போ தேயிலை மற்றும் மலிண்டோ ஏர் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ‘போ’ தேயிலை நிறுவனமும், மலிண்டோ ஏர் விமான சேவை நிறுவனமும் அனைத்துலக சூப்பர் ஸ்டார் 2015- ன் விளம்பர ஆதரவாளர்களாவர்.

i1Q-Dgq3zJSf2ZJHqK6OH3q-b_JItV9noYTtTvQigRs

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில், லேசான மழை பெய்தாலும் கூட, ரசிகர்கள் தொடர்ந்து நிகழ்ச்சியைக் கண்டு ரசித்ததோடு, இறுதிச் சுற்றுக்கான தங்களின் அனுமதிச் சீட்டுகளை போட்டி போட்டுக்கொண்டு பெற்றனர்.

FdRpHe2bXGrt9_B7jh6J9RlbM4rv2hD3JKIX3-YOUQI

அதுமட்டுமின்றி, பார்வையாளர்களில் இருந்து திறமையான பாடகர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு, இசையமைப்பாளர் பரத்வாஜ் மற்றும் மாதங்கி முன்னிலையில் பாடும் படி கூறப்பட்டனர்.

vktXCIHrO8Cq1lCDt39Xg4D1fIoFrdnM5oieS9PSTSE

அவர்களில் சிறப்பாகப் பாடியவர்களுக்கு, இந்தோனேசியாவின் பாலி மற்றும் தமிழகத்தின் திருச்சி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மலிண்டோவின் இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

UWkZYT1oeVOWzWCQJeb2B0OSpO-foX1FZMq9931irJ4

இறுதியாக, நடிகர் பிரஷாந்தின் ‘சாஹசம்’ படத்தின் இசைவெளியீடும் நடத்தப்பட்டது.

– ஃபீனிக்ஸ்தாசன்