Home Featured கலையுலகம் அஸ்ட்ரோவின் முயற்சிக்கு கமல்ஹாசன் பாராட்டு!

அஸ்ட்ரோவின் முயற்சிக்கு கமல்ஹாசன் பாராட்டு!

689
0
SHARE
Ad

kamalhassan-oru-kodiகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் கனடா என ஐந்து நாடுகள் பங்கேற்கும் ‘அனைத்துலக சூப்பர் ஸ்டார்’ பாடல் திறன் போட்டியின் இறுதி சுற்று எதிர் வரும் சனிக்கிழமை (15.08.2015) நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, போட்டியாளர்களுக்கு தனது வாழ்த்துகளை காணொளி வழி தெரிவித்திருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.

மேலும், 5 நாட்டு கலைஞர்களை ஒன்றிணைக்கும் அஸ்ட்ரோவின் இந்த முயற்சியை பாராட்டி பேசிருக்கிறார். பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ‘அனைத்துலக சூப்பர் ஸ்டார்’ போட்டியின் இறுதி சுற்றைக் காண உலக மக்களோடு தானும் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரோடு, பிரபல நடிகை சிம்ரன் மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். பரப்பரப்பாக 6 வாரங்களை கடந்து விட்ட இந்த பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று, பிரபல நட்சத்திரங்களின் முன்னிலையில் எதிர்வரும் 15.08.2015, சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. வெற்றி பெரும் குழுவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் காத்திருக்கிறது. இந்நிகழ்ச்சியின் நேரலையை ஆஸ்ட்ரோ விண்மீன் HD-இல் இரவு 8 மணிக்கு கண்டு இரசிக்கலாம்.

#TamilSchoolmychoice