Home Featured கலையுலகம் ஐஎஸ்எஸ் 2015: இறுதிச்சுற்றில் 1 லட்சம் அமெரிக்க டாலரை வெல்லப் போவது யார்?

ஐஎஸ்எஸ் 2015: இறுதிச்சுற்றில் 1 லட்சம் அமெரிக்க டாலரை வெல்லப் போவது யார்?

684
0
SHARE
Ad

vINMEENகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015-ன் மாபெரும் இறுதிச்சுற்று எதிர்வரும் ஆகஸ்ட்15-ம் தேதி, சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து அஸ்ட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:

“பாடல் திறன் போட்டி” எனும் பெயரில் தொடங்கப்பட்ட உள்ளூர் பாடல் போட்டி, 14 ஆண்டுகளில் பல்வேறு உருமாற்றங்கள் பெற்று இப்போது ‘அனைத்துலக சூப்பர் ஸ்டார்’ போட்டியாக உருவெடுத்து நிற்கிறது.  இது நாள் வரை உள்ளூர் கலைஞர்களை மேடையேற்றி அழகு பார்த்த இப்போட்டி, இம்முறை அனைத்துலகக் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கிடையே  ஒரு பிரம்மாண்ட இசைப் போரை நிகழ்த்தி வருகிறது.”

#TamilSchoolmychoice

“சுவாரசியமான அனுபவங்களோடு 6 வாரங்களை கடந்து விட்ட ‘அனைத்துலக சூப்பர் ஸ்டார்’ போட்டியின் இறுதிச் சுற்று வரும் 15ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் கோலகலமாக நடைபெறவுள்ளது. இச்சுற்றில் பாடகர் மனோவின் விண்மீன் குழுவும், இசையமைப்பாளர் ஆதீத்தியனின் வெள்ளித்திரை குழுவும் பலப்பரீட்சையில் களம் காண்கின்றன. வெற்றிப் பெரும் குழுவுக்கு ஒரு லட்சம்! ஆம். ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை காத்திருக்கிறது. இரண்டாம் நிலையில் வரும் குழுவுக்கு 70 000 அமெரிக்க டாலரும், மூன்றாம் நிலையில் வரும் குழுவுக்கு 40 000 அமெரிக்க டாலரும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.”Untitled

“உலக மக்களே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் இறுதிச் சுற்றின் நேரலை, எதிர்வரும் சனிக்கிழமையன்று ஆஸ்ட்ரோ விண்மீன் எச்-இல் (அலைவரிசை 231) இரவு 8 மணிக்கு ஒளியேறவிருக்கிறது. இந்த இசை விருந்தில் குடும்பத்தோடு இணைய மறவாதீர்கள்.”

இவ்வாறு அஸ்ட்ரோ தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.