Home இந்தியா கூகுளின் புதிய நிர்வாகத் தலைவர் சுந்தர் பிச்சைக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

கூகுளின் புதிய நிர்வாகத் தலைவர் சுந்தர் பிச்சைக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

587
0
SHARE
Ad

1441842001sundharpitchai1சென்னை, ஆகஸ்ட் 11- கூகுள் நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தலைவராகப் பதவியேற்றுள்ள சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர். வயது 43.  சென்னை பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்தவர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுந்தர் பிச்சை, தற்போது கூகுள் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியும், தனது டுவிட்டர் பக்கத்தில் சுந்தர் பிச்சைக்கு, வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தின் உங்கள் புதிய பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் நாம் பெருமை கொள்ளலாம்.