Home Featured கலையுலகம் வெள்ளித்திரை குழு ‘இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015’ பட்டத்தை வென்றது!

வெள்ளித்திரை குழு ‘இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015’ பட்டத்தை வென்றது!

634
0
SHARE
Ad

11888046_1206623486029836_4284820968577704636_nகோலாலம்பூர், ஆகஸ்ட் 16 –  நேற்று இரவு 8 மணி தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்ற அஸ்ட்ரோ ‘இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார் 2015’ பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்றில் பாடகர் மனோவின் விண்மீன் குழுவும், இசையமைப்பாளர் ஆதீத்தியனின் வெள்ளித்திரை குழுவும் மோதின.

அதில், வெள்ளித்திரை குழு மிகச் சிறப்பாகப் பாடி ‘இண்டர்நேசனல் சூப்பர் ஸ்டார் 2015’ பட்டத்தை வென்றதோடு, 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசையும் வென்றது.

வெள்ளித்திரை குழுவில் லோகேஸ்வரன் (மலேசியா), அபிஷேக் (கனடா), சுதர்சன் (இந்தியா), லலிதா (சிங்கை), நஞ்சினி (மொரிஷியஸ்) ஆகியோரும், விண்மீன் குழுவில் கணேசன் (மலேசியா), பாரிஜாதா (கனடா), திவ்யா (இந்தியா), சுதாசினி (சிங்கை), வீமணி (மொரிஷியஸ்) ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தர், மூத்த பாடகியான எல்.ஆர்.ஈஸ்வரி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தனர்.

இரண்டாவதாக வந்த விண்மீன் அணி 70,000 அமெரிக்க டாலரையும், மூன்றாவதாக வானவில் அணி 40,000 அமெரிக்க டாலரையும், மக்கள் தேர்வின் மூலம் 5,000 அமெரிக்க டாலரையும் வென்றனர்.