Home உலகம் ஐஎஸ் பயங்கரவாதக் கும்பலில் சேரச் சென்ற புதுமணத் தம்பதியர் கைது !

ஐஎஸ் பயங்கரவாதக் கும்பலில் சேரச் சென்ற புதுமணத் தம்பதியர் கைது !

565
0
SHARE
Ad

isis-terroristவாஷிங்டன், ஆக.ஸ்ட் 12-அமெரிக்காவில்  ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காகச் சென்ற புதுமண தம்பதியரைக் கொலம்பஸ் விமான நிலையத்தில் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் புதுமணத் தம்பதியர் இருவர் கொலம்பஸ் நகரிலிருந்து துருக்கியிலுள்ள இஸ்தாபுல் நகருக்குச் சென்று, அங்குள்ள ஐஎஸ் பயங்கரவாதக் கும்பலில் சேர்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அமெரிக்க உளவுத்துறையினர் அந்தப் புதுமணத் தம்பதியரது ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அவர்களுக்குக் கிடைத்த தகவல் உண்மை எனத் தெரிந்தது.

#TamilSchoolmychoice

துருக்கி செல்வதற்காகக் கொலம்பஸ் விமான நிலையத்திற்கு வந்திருந்த அந்தப் புதுமண தம்பதியரைக்  காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களும் தங்களது திட்டத்தை ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடம்  உளவுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மூலம் இன்னும் யார் யாரெல்லாம் ஐஎஸ் இயக்கத்தில் சேர முயற்சிக்கிறார்கள் என்கிற விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.