Home Featured வணிகம் எம்ஏஎச்பி குழுவில் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் இருக்கலாமா? – டோனி பெர்னாண்டஸ் கேள்வி!

எம்ஏஎச்பி குழுவில் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் இருக்கலாமா? – டோனி பெர்னாண்டஸ் கேள்வி!

747
0
SHARE
Ad

TONY_FERNANDESகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – “எம்ஏஎச்பி நிர்வாகக் குழுவில், போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இருவரை நியமித்து இருப்பது குறித்து ஏர் ஆசியா தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ்  கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் நாங்கள் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் அப்துல் அசிஸ் கப்ரவியை சந்தித்தோம். அவரிடம், எம்ஏஎச்பி நிர்வாகக் குழுவில் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இருவரை தேர்வு செய்திருப்பது குறித்து எங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளோம். அமைச்சகத்தின் கட்டுப்பாட்டாளர்களாக இருக்கும் அவர்கள், எம்ஏஎச்பி குழுவில் இருப்பது முறையல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் ஆகிய இருவரும் மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் (எம்ஏஎச்பி – MAHB)-ன் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.