Home இந்தியா சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் ஜெயலலிதா!

சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார் ஜெயலலிதா!

570
0
SHARE
Ad

jayalalithaசென்னை, ஆகஸ்ட் 12- கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்குத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில், “தமிழக இளைஞர்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாகத் தாங்கள் விள்ங்குகிறீர்கள். போட்டி நிறைந்த இன்றைய சூழலில் தனது கடின உழைப்பின் மூலம் மிக உயர்ந்த பதவியை அடைந்துள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.