Home Featured உலகம் சீனாவில் மிகப்பெரும் தீ விபத்து  – 32 பேர் பலி!

சீனாவில் மிகப்பெரும் தீ விபத்து  – 32 பேர் பலி!

839
0
SHARE
Ad

china1பெய்ஜிங், ஆகஸ்ட் 13 –  சீனாவின் வடபகுதியில் இருக்கும் தியான்ஜின் நகரில், ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கிடங்கில் மிகப் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன.

china2அரசு செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு, இரசாயனப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கிடங்கில் மிகப் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். அதிபர் ஜி ஜிங்பிங், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான மீட்பு நடவடிக்கைகளை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.

china4இதற்கிடையே மற்றொரு செய்தி நிறுவனமான சிசிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், “4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 32 பேர் பலியாகி உள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிர் பலி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.