Home Featured நாடு அது எம்எச்370-ன் பாகம் தான் – ஆஸ்திரேலியாவும் உறுதிபடுத்தியது!

அது எம்எச்370-ன் பாகம் தான் – ஆஸ்திரேலியாவும் உறுதிபடுத்தியது!

872
0
SHARE
Ad

MH370கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகம் மாயமான எம்எச்370-ன் பாகம் தான் என்பதை பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவும் ஒப்புக் கொண்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய கூட்டு முகைமை ஒருங்கிணைப்பு மையம் (JACC) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமான இறக்கையின் ஒருபகுதி, எம்எச்370-ன் பாகம் தான் என்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் உள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூலை 29-ம் தேதி, ரியூனியன் தீவில், விமானத்தின் இறக்கையின் ஒருபகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதை மலேசியக் குழுவினர் சோதனை செய்து முடிவை வெளியிட்ட பிறகு,  கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அது எம்எச்370-ன் பாகம் தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.