Home Featured தொழில் நுட்பம் பேஸ்புக்கில் தொலைபேசி எண்களை பதிவு செய்கிறீர்களா? எச்சரிக்கை!

பேஸ்புக்கில் தொலைபேசி எண்களை பதிவு செய்கிறீர்களா? எச்சரிக்கை!

666
0
SHARE
Ad

facebookகோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – சால்ட்.ஏஜென்சி என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின், இயக்குனர் ரேசா மொய்யாண்டின் சமீபத்தில் குறிப்பிட்ட சில நிரல்களைக் கொண்டு, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டனின் ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்களை கண்டறிந்தார். மில்லியன் கணக்கில் இருந்த அந்த எண்களை, பேஸ்புக்கில், ஆப் பில்டிங் நிரல்கள் (API) கொண்டு தேடினார். அப்போது அந்த எண்களை பொதுப் பிரிவில் (Public Access) வைத்து இருக்கும் ஏராளாமான பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியாகின.

பேஸ்புக் சார்ந்த இத்தகைய பெரும் பாதுகாப்புக் குறைப்பாட்டை அம்பலப்படுத்தி உள்ள அவர், பயனர்கள் பொது ஊடகங்களில் தங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடும் பொது கவனத்துடன் இருக்க வேண்டும். கூடுமானவரையில், எந்தவொரு தகவல்களையும் பொதுப் பிரிவில் வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதமே, பேஸ்புக் நிறுவனத்திடம் ஏபி-ஐ நிரல்கள் குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால், 1.44 பில்லியன் பயனர்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பிரிவான ‘ராண்ட் கார்ப்பரேஷன்’ (RAND Corporation), நட்பு ஊடகங்களில் இருக்கும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவதில், மிகப் பெரும் திரைமறைவு வர்த்தகம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளது. மேலும், தொலைந்து போன கடன் அட்டைகளை விட ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்குகள் மிகப் பெரும் பின்விளைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால் நட்பு ஊடகங்களையே பயன்படுத்தாமல் இருக்கலாமா? என்றால், பயன்படுத்தலாம் நமக்கோ, நம்மால் பிறருக்கோ அதன் மூலம் எந்தவொரு தனிப்பட்ட பாதிப்புகளும் ஏற்படா வண்ணம் பயன்படுத்த வேண்டும்.