Home Featured நாடு ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டி வரும் அஸ்ட்ரோ – மருத்துவ முகாம்களால் பயனடையும் மக்கள்!

ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டி வரும் அஸ்ட்ரோ – மருத்துவ முகாம்களால் பயனடையும் மக்கள்!

893
0
SHARE
Ad

unnamed (1)கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – ஆஸ்ட்ரோ உறுதுணை தனது சமுதாய கடப்பாட்டின் முயற்சியாக மக்களின் நலன் கருதி, கடந்த 5 ஆண்டு காலமாக மருத்துவ முகாம்களை மேற்கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் நாடுதளுவிய நிலையில் மீண்டும் 5 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெறவிருக்கிறது.

unnamed

ஆஸ்ட்ரோ உறுதுணை மேற்கொள்ளும் இந்த மருத்துவமுகாமிற்கு ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகம் ஆதரவு வழங்குகின்றது.

#TamilSchoolmychoice

இந்த அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை செராஸ் ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் பாலசந்திரன் சத்தியமூர்த்தி, ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, ஆசியா மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகத்தில் தலைமை நிர்வாகி டத்தோ டாக்டர் தர்மசீலன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

unnamed (2)

டி.எச்.ஆர். ராகா அறிவிப்பாளர் மற்றும் சுஸ்மித்தா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தினர்.

6-வது முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த மருத்துவ முகாம் வாயிலாக குறைவான வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அடிப்படையான மருத்துவ ஆலோசனைகள், தூய்மை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக் குறித்த விழிப்புணர்வு, கிசிச்சை மேற்கொண்டு வரும் நபர்களைக் கண்டறித்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்குவது, மற்றும் பொது சுகாதார அமைப்புகளின் திட்டங்களைக் குறித்த விழிப்புணர்வு தருவது போன்றவை இம்முகாமின் தலையாய நோக்கமாகும்.

unnamed (3)

ஆகவே, பொது மக்கள் இலவச மருத்துவ ஆலோசனைகள், சுகாதார பரிசோதனைகள், தன் முனைப்புத் தூண்டல் கருத்தரங்குகள், முதலுதவி விளக்கங்கள் ஆகிய சேவைகளோடு;  இரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு நோய், காது, கண், பல், மார்பகம், கருப்பை கழுத்து புற்று நோய் ஆகியவற்றுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகளையும் இந்த மருத்துவ முகாமில் மேற்கொள்ளலாம்.

unnamed (4)

மருத்துவ முகாமில் இடம்பெறும் வழக்கமான நடவடிக்கைகள் தவிர டெங்கி நோய் குறித்த விழிப்புணர்வு, இரத்த தானம், மது மற்றும் புகைப்பிடித்தலின் முறைகேடுகள் போன்றவை பொது மக்களுக்கு வாங்குவது இவ்வாண்டின் மருத்துவ முகாமின் பிரதான குறிக்கோளாகும்.

கீழ்காணும் அட்டவணை இவ்வாண்டு நடைபெறவுள்ள மருத்துவ முகாமின் தேதியும் இடங்களும் :

தேதி இடம்
15 ஆகஸ்ட் 2015 ஜாசின், மலாக்கா தமிழ்ப்பள்ளி
16 ஆகஸ்ட் 2015 லாடாங் சிரம்பான் தமிழ்ப்பள்ளி
21 ஆகஸ்ட் 2015 மெட்ரோபோலிட்டன் பல்கலைக்கழகம், மசாய், ஜொகூர்
22 ஆகஸ்ட் 2015 ஜொகூர் தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி

இந்த மருத்துவ முகாம் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இலவச மருத்துவ பரிசோதனைகள் மட்டுமின்றி மது மற்றும் புகைப்பிடித்தல் தவிர்க்கும் வழிமுறைகள், டெங்கி நோய், புற்றுநோய், முதலுதவி வழங்கும் முறை, சத்துணர்வு உணவுகள் உட்கொள்ளூம் முறை, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற கண்காட்சிகள்  மெட்ரோ போலிட்டன் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.

unnamed (5)

இந்த மருத்துவ முகாம் குறித்த விவரங்களுக்கு www.astroulagam.com.my எனும் அகப்பக்கத்தை நாடுங்கள்.