Home Featured உலகம் சீனா வெடி விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! ( அதிர வைக்கும் காணொளி)

சீனா வெடி விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! ( அதிர வைக்கும் காணொளி)

676
0
SHARE
Ad

china4பெய்ஜிங், ஆகஸ்ட் 13 –  சீனாவின் வடபகுதியில் இருக்கும் தியான்ஜின் நகரில், ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் கிடங்கில் நேற்று நள்ளிரவில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவத்தில், தற்போது பலி எண்ணிக்கை 44 -ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 64 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடி வருகின்றனர் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

அந்த பயங்கர வெடி விபத்தின் காணொளி:

https://www.youtube.com/watch?t=51&v=nQwRMGa4jsU&bpctr=1439452958