Home இந்தியா புலிகள் பாதுகாப்புத் தூதராக அமிதாப் பச்சன் நியமனம்!

புலிகள் பாதுகாப்புத் தூதராக அமிதாப் பச்சன் நியமனம்!

497
0
SHARE
Ad

1439422673-1072மும்பை, ஆகஸ்ட் 13- புலிகள் பாதுகாப்புத் தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏழு மாதங்களில் இந்தியாவில் மட்டும் 41 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலைமை நீடித்தால் காலப்போக்கில் இந்தியாவில் புலிகளே அரிது என்கிற சூழ்நிலை உருவாகிவிடும்.அப்புறம் புலிகளை டைனோசர் போல் வருங்காலச் சந்ததியினர் படத்திலும்,அருங்காட்சிச் சாலையில் பதப்படுத்தப்பட்ட நிலையிலும் தான் பார்க்க முடியும்.

#TamilSchoolmychoice

புலிகள் மனிதர்களைக் கொல்வதைப் போல, மனிதர்களும் புலிகளை வேட்டையாடிக் கொல்கிறார்கள். புலித் தோலுக்காக, பொழுது போக்கிற்காக, பெருமைக்காக இப்படிப் பல காரணங்களில் புலிகள் கொல்லப்பட்டு வருகின்றன.

இதனால், இந்தியாவில் அழிந்து வரும் அரிய வகை வன விலங்குகள் பட்டியலில் புலிகள் இடம் பிடித்துள்ளன.

ஆகவே, புலிகளைப் பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

சர்வதேச அளவிலும் புலிகளைக் காப்பதற்காக ஜூலை 29ம் தேதி உலகப் புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் அமிதாப் பச்சனைப் புலிகள் பாதுகாப்புப் பிரசாரச் சிறப்புத் தூதராக நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அமிதாப் பச்சனிடம் சம்மதம் கேட்கப்பட்டது.

அமிதாப்பச்சன் இதற்குச் சம்மதித்ததால்,புலிகள் பாதுகாப்புப் பிரசாரத் தூதராக அவர் நியமிக்கப்பட்டார்.