Home இந்தியா பூரண மதுவிலக்கு வேண்டி விஜயகாந்த் உண்ணாவிரதம்

பூரண மதுவிலக்கு வேண்டி விஜயகாந்த் உண்ணாவிரதம்

444
0
SHARE
Ad

viசென்னை,ஆகஸ்ட் 13-  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்த உண்ணாவிரதத்தில் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், தேமுதிக சட்டப்பேரவைப் உறுப்பினர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 6 -ஆம் தேதி தேமுதிக சார்பில் மதுவை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

அனுமதி இல்லாமல் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அப்போதே விஜயகாந்த், பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 13-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை 8 மணி முதல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக- வினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

.