Home Featured நாடு அம்னோவிற்கு தலைமையேற்க கைரி தான் தகுதியானவர் – காதிர் ஜாசின் கருத்து

அம்னோவிற்கு தலைமையேற்க கைரி தான் தகுதியானவர் – காதிர் ஜாசின் கருத்து

500
0
SHARE
Ad

Khairy-210110-550கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதினால் மட்டுமே பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாகிற்குப் பதிலாகப் பொறுப்பேற்க முடியும். காரணம் அம்னோவில் அவர் மட்டும் தான் மற்றவர்களைக் காட்டிலும் நம்பிக்கையளிக்கும் தலைவராக விளங்குகின்றார் என்று நாட்டின் மூத்த பத்திரிக்கையாளரான காதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

அதற்காக தன்னை கைரியின் ஆதரவாளர் என்று எண்ணிவிட வேண்டாம் என்று கூறியுள்ள காதிர், அம்னோவில் வேறு எந்த ஒரு நம்பிக்கையளிக்கும் தலைவரும் இல்லை என்பதை வைத்து தான் கைரியைத் தான் மதிப்பிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“நான் எவ்வளவு தான் கடினமாக முயற்சி செய்தாலும், எதிர்காலத்தில் அம்னோவிற்குப் பொறுப்பேற்க கைரிக்கு நிகராக வேறு எந்த ஒரு தலைவரும் என் கண்ணுக்குத் தெரியவில்லை” என்று காதிர் தனது வலைத்தளத்தில் இன்று குறிப்பிட்டுள்ளார்.’

#TamilSchoolmychoice