Home உலகம் ஈராக் வெடிகுண்டுத் தாக்குதலில் 60 பேர் உடல் சிதறிப் பலி!

ஈராக் வெடிகுண்டுத் தாக்குதலில் 60 பேர் உடல் சிதறிப் பலி!

542
0
SHARE
Ad

13aug-baghdad-bomb-1பாக்தாத், ஆகஸ்ட் 13- ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ட்ரக் வண்டி மூலம் தீவிரவாதிகள் பயங்கரமான வெடி குண்டை வெடிக்கச் செய்ததில் 60 பேர் உடல் சிதறிப் பலியானார்கள்: 200 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சடர் நகர் கடை வீதியில்  வெடி குண்டு நிரப்பிய டிரக் வண்டிஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்தது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து விட்ட இத்தாக்குதலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பேர் உடல் சிதறிப்  பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் உறுப்புகள் சிதைந்த நிலையில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.எனவே, பலியானவர்களின் எண்|ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தப் பயங்கரத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பும் இதுபோல் பாக்தாத் கடைவீதியில் இருவேறு இடங்களில் நடந்த இரண்டு கார் குண்டுவெடிப்பில் சிக்கி 53 பேருக்கும் மேற்பட்டோர் உடல் சிதறிப் பலியானார்கள்; 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அதுபோல் இன்னொரு வெடிகுண்டுத் தாக்குதலும் நடந்திருப்பது அந்நாட்டு மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலால் ஈராக் நிலை குலைந்து போயுள்ளது