Home Featured கலையுலகம் “சினிமாவில் வருமானம் இல்லாததால் சிலைகள் கடத்தினேன்” – வீ.சேகர் அதிர்ச்சி வாக்குமூலம்

“சினிமாவில் வருமானம் இல்லாததால் சிலைகள் கடத்தினேன்” – வீ.சேகர் அதிர்ச்சி வாக்குமூலம்

667
0
SHARE
Ad

29-1419846440-v-sekar1-60சென்னை, ஆகஸ்ட் 13 – சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல இயக்குனர் வீ.சேகரை, கிண்டியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு காவல்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வீ.சேகர் காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

“குடும்ப பாங்கான படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்ற கொள்கையுடன் திரையுலக்கு வந்து இதுவரை பல படங்களை இயக்கி உள்ளேன். தற்போது எனது மகனை வைத்து ‘சரவண பொய்கை’ என்ற படத்தை எடுத்து வருகிறேன். சினிமாவில் போதிய வருமானம் இல்லாததும் சிலை கடத்தலுக்கு என்னை இழுத்து வந்தது.

கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் ஆசையில் என்னையும் அறியாமல் ஈடுபட்டு விட்டேன். சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் சிலர் மூலமாக எனக்கு சிலை கடத்தல் கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த 8 சிலைகளும் கடந்த ஜனவரி மாதம் வெவ்வேறு கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சிலைகள் சில மாதங்கள் எனது வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்தன. நான் சினிமாவில் தரமான படங்களை இயக்கி வந்ததால் என் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

இந்த சிலைகளை விற்பதற்காக சிலை வாங்கி விற்கும் புரோக்கர்கள் கலந்து கொள்ளும் ரகசிய கலந்தாய்வு கூட்டமும் அடிக்கடி நடைபெறும். இதில் நானும் பலமுறை பங்கேற்று உள்ளேன். இந்த சிலைகளை எப்படியாவது வெளிநாடுகளுக்கு கப்பல் மூலமாக அனுப்பி விற்று விட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.