Home இந்தியா “பேராசைப்பட்டு சிலை திருடும் பாவத்தைச் செய்துவிட்டேன்” பெண் நிருபர் கதறல்!

“பேராசைப்பட்டு சிலை திருடும் பாவத்தைச் செய்துவிட்டேன்” பெண் நிருபர் கதறல்!

918
0
SHARE
Ad

statuea0814சென்னை – 80 கோடி மதிப்பிலான சாமி சிலைகள் திருட்டில் வீ.சேகரை அடுத்துச் சிக்கியுள்ள பெண் நிருபர் மாலதி, பணத்திற்குப் பேராசைப்பட்டுப் பாவத்தைச் செய்துவிட்டதாகப் புலம்பி அழுது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

மயிலாப்பூரில் வசிக்கும் மாலதிக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரத்தில் இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3 சிலைகளும், பையூர் என்ற கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 3 சிலைகளும், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலில் சிவன், பார்வதி சிலைகள் இரண்டும் திருட்டுப் போயின.

#TamilSchoolmychoice

மேற்கண்ட 8 சாமி சிலைகளின் மதிப்பு ரூ.80 கோடியாகும். இந்த 8 சாமி சிலைகளையும் வெளிநாட்டிற்குக் கடத்தி விற்பதற்காகக் கொண்டு வந்த போது சிலைத் திருட்டு மற்றும் கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் அவற்றைக் கைப்பற்றிச் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தனர்.

அவர்களைத் தொடர்ந்து இந்தத் திருட்டில் முக்கியப் பங்கு வகித்த இயக்குநர் வீ.சேகர் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இந்தத் திருட்டில் தொடர்புடையவர்களைக் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் இதில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியாகிய பெண் நிருபர் மாலதி (வயது 35) நேற்று கைது செய்யப்பட்டார்.

அவர் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

“நான் சிறிய பத்திரிகை ஒன்றில் நிருபராகப் பணியாற்றினேன். எனக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.பத்திரிக்கைத் தொழிலில் போதிய வருமானம் வரவில்லை.

அதனால், கோவில் சம்பந்தப்பட்ட பொருட்களில் இருடியம் இருப்பதாக ஆசைகாட்டிப் பணம் பறிக்கும் மோசடித் தொழிலில் இறங்கினேன். அதிலும் போதுமான வருமானம் இல்லாததால், சிலைக் கடத்தல் தொழிலைத் தேர்வு செய்தேன்.

ஏற்கனவே சிலைக் கடத்தல் கும்பலோடு தொடர்புடைய எனது அண்ணன் கருணாகரன் மூலம், சிலைக் கடத்தல் மன்னன் செங்குன்றம் ஜெயக்குமார் எனக்குப் பழக்கமானார்.

நான் நிருபராகப் பணியாற்றியதால் யாருக்கும் சந்தேகம் வராமல் இந்தத் தொழிலில் ஈடுபட முடிந்தது. அதுமட்டுமல்லாமல், எனக்குப் பழக்கமான காவல்துறையில் அதிகாரி ரவிச்சந்திரனையும் ஆசை காட்டி இதில் சேர்த்துக் கொண்டேன்.

நான் கோவில்களை நோட்டம் விட்டுத் திட்டம் தீட்டித் தருவேன். சிலைகள் திருடுவதில் பலே கில்லாடியான மாரி கும்பலைச் சேர்ந்தவர்கள் சிலையைத் திருடி வருவார்கள்.

பணத்திற்காகச் சிலைத் திருட்டுப் பாவத்தைச் செய்துவிட்டேன்.” என்று கதறி அழுதபடி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.